துபாய்: டிரைவரில்லா பஸ் சோதனை ஓட்டம்!

துபாய்:

டிரைவர் இல்லாமல் ஓடக்கூடிய சிறிய ரக பஸ் சோதனை ஓட்டம் துபாயில் நடந்தது.

2-bus 1bus-1

துபாயில் அமைந்திருக்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் காலிபாவின் அருகிலுள்ள முகம்மது பின் ரஷீத் போலிவார்டு மற்றும் விதா டவுடன்டன்  துபாய் ஓட்டல் இடையிலான 700 மீட்டர் நீளம் கொண்ட தடத்தில் இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் நடந்தது.

இதுதான் துபாயின் நீளமான நடைபாதை தடமாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆளில்லாமல் இயங்கும் மினி பஸ்சை EZ10 என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, டிரைவருக்கான கேபின் இல்லாததால், எளிதாக 10 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

முழுவதும் சென்சார் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மினி பஸ் போக்குவரத்து நடைமுறையில் சிரமம் இல்லாமல் இருந்தால், மேலும் பல இடங்களில் இதுபோன்ற மினி பஸ்சை இயக்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பஸ்சை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஈஸி மைல் நிறுவனமும், துபாயை சேர்ந்த ஆம்னிக்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: bus, Driverless, dubai, special news, Test Driver, world, உலகம், ஓட்டம், சிறப்பு செய்திகள், சோதனை, டிரைவரில்லா, துபாய், பஸ்
-=-