ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய்  போலீஸ் அனுமதி

துபாய்

நடிகை ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஓப்படைக்க அனுமதிக் கடிதத்தை இந்திய தூதரக அதிகாரிகளிடம் துபாய் போலீஸ் வழங்கியது

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ஆம் தேதி துபாய் ஓட்டலில்  குளியல் தொட்டியில் முழுகி உயிர் இழந்தார்.   அவரது உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு துபாய் காவல்துறையின் அனுமதிக்காக பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது வெளியான தகவலின்படி ஸ்ரீதேவியின் உடலை அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அனுமதி கடிதத்தை துபாய் காவல் துறை இந்திய தூதரக அதிகாரிகளிடம் வழங்கி உள்ளது.   இதை ஒட்டி ஸ்ரீதேவியின் உடல்  பதப்படுத்த எடுத்துச் செல்லப்பட்டுள்ளது

அவர் உடலை எடுத்து வர ஏற்கனவே அம்பானியின் விமானம் துபாயில் தயார் நிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.