31 நொடிகளில் கொள்ளை: துபாய் போலீசுக்கே தண்ணி காட்டிய பலே கும்பல்!

Dubai: the thieves took barely 31 seconds to loot the shop and run away

துபாயில், நகைக்கடைக்குள் புகுந்து 31 நொடிகளுக்குள் நகைகளைக் கொள்ளையடித்து, தப்பிச் சென்ற கும்பலை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நைஃப் என்ற பரபரப்பான பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் முகமூடியுடன் புகுந்த மூன்று பேர், 31 நொடிகளுக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அடையாளம் தெரியாத அந்த நபர்களை, 24 மணி நேரத்திற்குள் துபாய் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். இந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்து மேலும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். ஆறு பேரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் சட்டங்கள் உள்ள துபையில், இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.