நடிகர் ஷாருக்கான் பிறந்தநாளுக்காக வண்ணமயமாக ஒளிர்ந்த துபாயின் புர்ஜ் கலிஃபா…..!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நேற்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சையாக கொண்டாடினர்.

இதனிடையே, துபாயில் உள்ள மிக உயரிய புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் வண்ண விளக்குகள் ஒளிர்வதின் மூலம் ஷாருக்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டும் ஷாருக்கானின் பிறந்தநாளன்று புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் இதே போன்று வண்ண விளக்குகள் மூலம் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

You may have missed