வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அயோக்யா’. விமர்சன ரீதியாகநல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தெலுங்கு படமான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘அயோக்யா’ .

இந்த படத்தின் டைட்டில் கார்ட்டில் முன்னணி டப்பிங் கலைஞர் ரவீனாவின் பெயர் இடம்பெறவில்லை. ‘அயோக்யா’ படத்தில் ராஷிகண்ணாவுக்கு டப்பிங் பேசியவர் ரவீனா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கோபமுற்ற ரவீனா தனது ட்விட்டார் பக்கத்தில் “டப்பிங் கலைஞர்களின் பெயர்களை, ‘அயோக்யா’ படத்தின் இறுதிக்கட்ட டைட்டில் கார்டில் பார்க்கவில்லை. மெஸ் அண்ணாக்கள், டிரைவர்கள், பெயிண்டர்கள், சவுண்ட் மேலாளர்கள் என அனைவரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், எங்களுடைய டப்பிங் கலைஞர்களின் பெயர்கள் மட்டும் பலமுறை விடுபடுகிறது. காத்திருப்போம்” என பதிவிட்டுள்ளார்.