டப்பிங் ஒருகலை.. அதுதான் இதயம்.. கவிதை பாடும் கனிகா.

டிகை கனிகா ’பைவ் ஸ்டார்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். ’வரலாறு’ படத்தில் அஜீத்குமார் ஜோடியாக நடித்தார். தமிழ் தவிர மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் விஜய்சேதுபதி நடிக்கும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர் ’என்ற படத்தில் நடிக்கிறார். வெங்கட கிருஷ்ணா இயக்கியுள்ளார். இசக்கி துரை தயாரிக்கி றார். இயக்குனர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி. நடிகர் விவேக் நடிகின்றனர்.

 


கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து சினிமா படங்களுக்கு போஸ்ட் புரொடக் ‌ஷன் பணிகள் தொடங்கியது. இப்படத் தின் டப்பிங்கில் நடிகை கனிகா கலந்து கொண்டார்.
இதுபற்றி அவர் கவிதை நடையில் கூறும் போது,’டப்பிங் உண்மையில் ஒரு கலை அந்த கலை என் இதயம். கதாபாத்திரங் களுக்கு உயிர் கொடுக்கும் நிலை. இன் றைக்கு பங்கேற்பது எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல் ஏனென்றால் இது நான் நடிக்கும் தமிழ் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இலங்கை தமிழ் கற்றுக் கொண்டு பேசியது மிகவும் ஆர்வமாக இருந்தது’ என்றார்.

You may have missed