ஒரு படத்துக்கு ரூ.5லட்சம் வாங்கிய சின்மயி ரூ.90 சந்தா கட்டவில்லை: டப்பிங் யூனியன் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு

சென்னை:

ரு படத்துக்கு ரூ.5லட்சம் வரை சம்பளம்  வாங்கிய சின்மயி, டப்பிங் யூனியன் சங்கத்துக்கு  ரூ.90 சந்தாகூட  கட்டவில்லை என்று டப்பிங் யூனியன் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

தமிழகத்தில் பாடகி சின்மயி  கவிஞர் வைரமுத்து மீது கூறிய பாலியல் விவகாரம்  பெரும் பூதாகாரமாக வெடித்த நிலையில், அவர் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.  பின்னர் நடைபெற்ற டப்பிங் யூனியன் தேர்தலின்போது, தன்னை வாக்களிக்க அனுமதிக்கப்பட வில்லை என்றும் சின்மயி குற்றம் சாட்டியிருந்தார்.   இந்த நிலையில், அவர் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர விரும்புவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் டப்பிங் யூனியன் சங்க நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சின்மயிமீது குற்றம் சாட்டியவர்கள், அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய டப்பிங் யூனியன் சங்க நிர்வாகி, சின்மயி டப்பிங் யூனியன் குறித்து அவதூறாக பேசுவதை நிறுத்த வேண்டும். டப்பிங் யூனியன் 10 சதவிகிதம்  வாங்குவதாக கூறுவது தவறு. யூனியனை பற்றி தெரியவார்கள்தான் அப்டி கூறி வருகிறார்கள் என்றவர், 10 சதவிகிதம் வாங்கி, அதில் 5 சதவிகிதம் இஞ்சார்ஜ் சைடுக்கு கொடுத்து விட்டு, 5 சதவிகிதம் மட்டும்தான் யூனியன் எடுத்துக்கொள்கிறது. இதுதான் வழக்கமாக நடைபெற்று வரும்முறை என்றார்.

ஆனால் 10 சதவிகிதம் வாங்கும் யூனியன் கொள்ளையடிப்பதாக சின்மயி வதந்திகளை பரப்பி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினர்

டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி  பதவி ஏற்றபிறகுதான் தங்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் உத்தரவாதமாகி உள்ளது என்றவர்கள்அவர் தலைவராக வராமல் இருந்திருந்தார் டப்பிங் யூனியன் இவ்வளவு பிரசித்தி  பெற்றிருக்காது என்றனர்.

டப்பிங் யூனியன் சங்க நிர்வாகிகள்

இன்று நிறையே பேர் வெளியில் இருந்து குறை சொல்கிறார்கள் என்றவர், முதலில் சின்மயிக்குத் தான் சொல்லனும்…. சின்மயி கலியாணத்துக்கு எங்களுக்கு இன்விடேசன் வந்தது. அதில் பரிசு பொருட்கள் தர வேண்டாம் என்று கூறியது. ஆனால் பணமாக கொடுங்கள் என்று கூறி பணமாக வாங்கிக்கொண்டது என்று தெரிவித்தார்.

தற்போது சங்கம் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என்றவர்,  நீயெல்லாம் இந்த மாதிரி பேசுவது ரொம்ப தப்பு. என்று சின்மயிமீது சாடினார்.   ஒரு படத்துக்காக ரூ.5 லட்சம், 3 லட்சம், 2 லட்சம் ரூபாய் வரை வாங்குபவர்கள் 90 ரூபாய் சந்தா கட்ட முடியல என்று பேசியவர்,  டப்பிங் யூனியனில் இருந்த உன்னை நீக்கியது எலக்ஷன் ஆபிசர்தான்… என்று கூறினர். இன்றைக்கு மற்றவர்கள்கூட சேர்ந்துகொண்டு தப்பு தப்பா பேசுவது மன உளைச்சலையும், வேதனையையும் கொடுக்கிறது. இது தொடர்ந்து கொண்டே போவற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இன்று செய்தியாளர்களை சந்தித்தாக கூறினர்.

யூனியன் உறுப்பினர்களிடம் வாங்கும் சந்தாவுக்கு யூனியன் முறைப்படி ரசிது கொடுத்து வருகிறது. . அவர்சொல்வது அனைதும் பொய். என்றவர்கள், சின்மயி 2 வருடம் சந்தா கட்டாததால், அவர் ஓட்டுபோட தகுதி இல்லை என்று எலக்ஷன் கமிஷனராக  நியமிக்கப்பட்ட நீதிபதிதான்  அவர் ஓட்டு போடுவதை தடுத்துவிட்டதாகவும் கூறினார்.

ஆனால் சின்மயி அனைத்தும் யூனியன் தான் காரணம் என்று பழி போட்டு வருவதாகவும்,  நீங்கள் யூனியனில் சேர வேண்டுமென்றதால் அதற்கான கடிதம் கொடுங்கள்… நாங்கள் சேர்க்க மாட்டோம் என்று சொல்லவில்லை என்றவர், கண்டிப்பாக சேர்த்து  கொள்வோம் என்றவர். பைலாவில் என்ன உள்ளதோ அதன்படி அவர் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும் தெரிவித்தனர்.

பொய்யான தகவல் யாரும் பரப்பவில்லை என்ற மற்றொரு நிர்வாகி, ஒருசிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரச்சினைகளை வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

ஒரு படத்துக்கு ரூ.5லட்சம் வாங்கிய சின்மயி ரூ.90 சந்தா கட்டவில்லை: டப்பிங் யூனியன் சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு