வாத்துகள் நீந்துவதால் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு கூடுகிறது……திரிபுரா முதல்வர்

டில்லி:

“மகாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது” என திரிபுரா பாஜக முதல்வர் பிப்லப் குமார் தேப் சில மாதங்களுக்கு முன்பு கூறி நகைச்சுவையை ஏற்படுத்தினார். ‘‘ஐஸ்வர்யா ராய் இந்திய அழகை பிரதிபலிக்கிறார்’’. டயானா ஹைடன் இல்லை என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து ‘சிவில் இன்ஜினியர்கள் தான் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுந்த தகுதி பெற்றவர்கள். மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் அல்ல’’ எனுறு பேசினார். இப்படி தொடர் சர்ச்சைகளை கிளப்பி வரும் பிப்லப் குமார் தற்போது புதிதாக ஒரு கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார்.

ருத்ராசாகர் பகுதியில் நடந்த படகுப் போட்டியை தொடங்கி வைத்த அவர் பேசுகையில், “ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகள் அரசு சார்பில் வழங்கப்படும். வாத்துகள் ஏரியில் நீந்தும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்.

இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது” என தெரிவித்துள்ளார். எவ்வித ஆதாரமும் இல்லாமல் முதல்வர் இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது என எதிர்கட்சிகள் கண்டித்துள்ளன.