ஜிஎஸ்டி அதிகரித்தால் வாகன உற்பத்தித்துறை மேலும்  சீர் கெடலாம் : பவன் கோயங்கா கவலை

டில்லி

ஜி எஸ் டி வரி விகிதம் மாறினால் வாகன உற்பத்தித் துறை மேலும் சீர் கெடலாம் என தொழிலதிபர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வாகன உற்பத்தித் துறை கடும் சீரழிவைச் சந்தித்து வருகிறது   வாகன விற்பனை முழுவதுமாக குறைந்து வருவதால் பல நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன.  இதனால் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.   இந்த நிலையைப் போக்க வாகனக் கடன் அளிப்பதை  அதிகரித்த போதிலும் தற்போது ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வந்ததால் இந்த துறை மீள வாய்ப்பு மேலும் குறைந்துள்ளதாகப்  பல தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று மகேந்திரா அண்ட் மகேந்திரா நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா நேற்று அளித்த தொலைக்காட்சி போட்டியில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பிஎஸ்-ஆறாம் தரநிலை இஞ்சின் உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாலும் டிராக்டர்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் அதிகரிப்பதும் வாகன உற்பத்தித் தொழில்துறைக்கு பெரும் அடியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது பேட்டியில், ” ஒட்டுமொத்த தொழில்துறையும் வீழ்ச்சியடைந்திருந்தாலும், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் செயல்பட முடிந்தது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது மற்றவர்களை விடச் சற்று சிறப்பாக இருந்தது.  இப்போது வாகன உற்பத்தி தொழிலில் இரண்டு பிரிவுகள் கவலைக்கிடமாக உள்ளது.

அதில் ஒன்று டிராக்டர் பிரிவு.   அங்கு தற்போதைய ஜிஎஸ்டி 12 சதவிகிதம் மற்றும் அது 18 சதவிகிதம் அல்லது 15 சதவிகிதமாக மாறக்கூடும் எனச் சொல்லப்படுகிறது, இது டிராக்டர் தொழிலுக்கு ஒரு பெரிய அடியாக இருக்கும், ஏனெனில் 12% அக  15 அல்லது 18% ஆக மாறினால், அது ஒரு டிராக்டரின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.

இரண்டாவதாக இப்போது ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் மின்சார வாகனங்கள் (ஈ.வி). 8 சதவிகிதம் அல்லது 12 சதவிகிதம் வரை சென்றால் அது ஒரு மற்றொரு அடியாக இருக்கும்.

கடந்த செப்டம்பர் வரை, எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்கச் சரிவு இருந்தது, ஆனால் தொழில்துறையைப் பொறுத்தவரை, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சில்லறை வர்த்தகத்தில் 5 சதவிகித அதிகரிப்பு காணப்பட்டது,  வரும் காலாண்டில் நிறுவனம் மீண்டும் விற்பனை சரிவைச் சந்திக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

எங்கள் நிறுவனத்தின் வாகன பிரிவு, சிறு வணிக வாகனங்கள் (சி.வி), லாரிகள் மற்றும் டிராக்டர்களில் ஆண்டு முதல் தேதி வரை (ஒய்.டி.டி) நவம்பர் வரை விற்பனையில் ஒரு சிறிய அதிகரிப்பை கண்டுள்ளது.   பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை அதே நேரத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது

கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்ததைவிட சில வாகனங்கள் விற்பனை கொஞ்சம் அதிகமாக இருக்கலாம், சில குறைவாக இருக்கலாம், ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்காது.“ எனத் தெரிவித்தார்.

1 thought on “ஜிஎஸ்டி அதிகரித்தால் வாகன உற்பத்தித்துறை மேலும்  சீர் கெடலாம் : பவன் கோயங்கா கவலை

  1.  * கடந்த ஐந்து வருடங்களாக அரசு என்னென்ன விதத்தில் வருவாயை பெருக்கணுமோ அந்த வீதத்தில் பெருக்கி கொண்டது , அதுபோல வரும் ஐந்து வருடங்கள் மக்களுக்கு விட்டு கொடுக்கும் வகையில் செயல்பட்டால் என்ன ? வரி வீதத்தை குறைத்து வரி செலுத்துவோரை அதிகரித்தால் என்ன ? பெரிய நிறுவனங்கள் ஒவ்வொன்றாய் வீழ்ச்சியடையும் நிலையில் வந்து கொண்டிருக்கிறதே !  

Comments are closed.

You may have missed