டெல்லி:
“சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்ளை அறிவித்த மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அடுத்த 3 மாதங்களுக்கான தொழிலாளர்களின் பிஎஃப் சந்தாவை அரசே செலுத்தும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

18 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி, மக்களுக்கு திரும்ப தரப்பட்டுள்ளது என்று கூறியவர்,  வருமான வரி பிடித்தம் திரும்ப செலுத்தபட்டதன் காரணமாக 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயனடைந்துள்ளனர் என்றார்.

வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான ஜூலை 31 ல் இருந்து நவம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது.
ஜூலை 31, ஆகஸ்ட் 31 வரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வருமானவரி வழக்குகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான விவாதத் சே விஸ்வாஸ் திட்டம் நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
விவாதத் சே விஸ்வாஸ் திட்டம் டிசம்பர் 31 வரை நீடிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைக்கப்படும். முன்கூட்டியே பிடித்தம் செய்ய வேண்டிய வரியை 25% குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மக்களிடம் ரூ.50,000 கோடி பணப்புழக்கம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
டிடிஎஸ் பிடித்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், வியாபாரம், வேறு காரணத்திற்காகவோ ரூ.15,000க்கும் மேல் செலுத்தப்படும் தொகைக்கு வரி பிடித்தம் செய்யப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.