Random image

2019 மக்களவை தேர்தல் எதிரொலி : பிரதமர் வெளிநாட்டுப் பயணம் இனி இல்லை

டில்லி

ரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் பணி காரணமாக இனி பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயனம் செல்ல மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014 ஆம் வருடம் பிரதமராக பதவி ஏற்ற மோடி இதுவரை 48 வெளிநாட்டுப் பயணம் செய்துள்ளார்.   சென்ற ஆண்டு மட்டும் அவர் 14 வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.   அவர் சமீபத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் வரை ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேர்வை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்தது.    இந்த தேர்தலின் போது அனைத்து மாநிலங்களிலும் மோடி பிரசாரம் செய்தார்.    ஆயினும் சத்திஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.   இந்த தேர்தல் பிரசாரங்களில் எதிர்க்கட்சிகள் பிரதமர் நாட்டில் இல்லாமல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டின.

தற்போது அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி பிரதமருக்கு உள்நாட்டில் மக்களவை தேர்தல் உள்ளிட்ட பல பணிகள் உள்ளதால் அவர் வரும் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் இந்த நான்கு மாதங்களும் அவர் உள்நாட்டில் பல நிகழ்வுகளில் கலந்துக் கொள்வார் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.