சான்பிரான்சிஸ்கோ

ப்ரிக்க தேர்தலை ஒட்டி இஸ்ரேலில் பல போலி கணக்குகள் தொடங்கியதாக கூறி முகநூல் நிர்வாகம் அந்த கணக்குகலை முடக்கிஉள்ளது.

மக்கள் மத்தியில் தற்போது சமூக வலை தளமான முகநூல்,டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவைகளின் தாக்கம் அதிகம் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நேரத்தில் முகநூல் கணக்குகளில் இருந்து விவரங்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. அதன் பிறகு அந்த புகார் உண்மை என நிரூபிக்கப் பட்டதை அடுத்து.முகநூல் அதிபர் மார்க் மன்னிப்பு கோரினார்.

அதன் பிறகு முகநூல் நிர்வாகம் தனது கணக்குகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமான ஆர்கிமிடிஸ் குழுமம் ஒரு விளம்பர நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் லட்சக்கணக்கான போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் மூலம் தங்களை உள்ளூர் வாசிகள் என ஆப்ரிக்க மக்கள் மற்றும் ஆப்ரிக்க உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு அறிமுகம் செய்துக் கொண்ட நிறுவனம் பல செய்திகளை இந்த கணக்குகள் மூலம் பரப்பி உள்ளன.

இதன் மூலம் இந்நிறுவனம் ஆப்ரிக்க நாடுகளான நைஜீரியா, செனகல், டோகோ, அங்கோலியா, நைஜர் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் தேர்தலின் போது பல தகவல்களை பரப்பி உள்ளது. அது மட்டுமின்றி லத்தின் அமெரிகக மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தேர்தலிலும் இவ்வாறு இந்நிறுவனம் தகவல்கள் பரப்பியதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை வெளியிட்ட முகநூல் நிர்வாகம் இந்த நிறுவனம் தொடங்கி உள்ள அனைத்து கணக்கு விவரங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.