சிவகாசி: இந்தாண்டு, பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதால், சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான சிவகாசி பட்டாசுகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு தீபாவளிக்கு ரூ.2300 கோடி மதிப்பிற்கு பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. பின்னர், அவை வெளிமாநிலங்கள் உள்பட, பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால், பட்டாசு வெடிப்பதற்கு ராஜஸ்தான், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் தடை விதித்தன. இதனால், ரூ.1000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்தன.

பட்டாசுகளை உற்பத்தி செய்து அனுப்பிவைத்த பிறகே, மாநிங்கள் தடை விதித்ததாகவும், இதனால், தங்களுக்கு வரவேண்டிய பெருமளவு நிலுவைத்தொகைகள் நின்றுவிட்டன என்றும், இதனால் வரும் நாட்களில் உற்பத்தி செயல்பாட்டினை துவங்குவது சிக்கலாகிவிடும் என்றும் கவலை தெரிவிக்கின்றனர் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள்.