கஜா புயல் : கடல் அமைதியால் ராமேஸ்வர மீனவர்கள் அச்சம்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் அமைதியாக உள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கஜா புயல் ராமேஸ்வரம் அருகே கடலை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் புயலின் வேகம் அடிக்கடி மாறி வருவதால் எப்போது கடக்கும் என்பதை வானிலை ஆய்வு  மையத்தினரால் சரியாக குறிப்பிட்டு அறிவிக்க முடியவில்லை.

ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட கடல் பகுதி எப்போதும் கடல் மிகவும் சீற்றத்துடன் அதிக அலைகளுடன் காணப்படும். ஆனால் நேற்று முதல் இப்பகுதியில் கடல் அமைதியாக உள்ளது. ஒரு சிறு அலையும் இல்லாமல் அமைதியான குளம் போல் உள்ளது.

இதனால் இந்தப் பகுதியில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் இங்குள்ள மீனவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.  அதை ஒட்டி இந்தப் பகுதியில் கடற்கரை ஓரம் உள்ள பட்டகுகளை வேறு இடங்களுக்கு மீனவர்கள் மாற்றி வருகின்றனர்.