சென்னை:

மிழகத்தில் நடைபெற்று வரும்  காவிரி போராட்டம் காரணமாக சென்னை  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

டில்லியில் இன்று நடைபெற்ற ஐசிசிஐ, பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் இதுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் ரத்து செய்யப்பட்ட 6 போட்டிகளும் கேரளாவின் கொச்சியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ஐபிஎல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் நடைபெற்ற வரலாறு காணாத போராட்டம் மேலும் நடைபெற உள்ள போட்டிகள் சென்னையில் நடைபெறாது என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே 7 போட்டிகள் சென்னை மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை யில் நேற்று நடைபெற்ற காவிரி போராட்டம் காரணமாக  நேற்றைய போட்டி பெரும் பரபரப்புடன், பலத்த போலீஸ் பாதுகாப்புடனும் நடைபெற்றது. அப்படி இருந்தும் மைதானத்திற்குள் செருப்பு வீசப்பட்டது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து,  ஏற்கனவேவே அறிவித்தபடி வரும்  20ந்தேதி, 28ந்தேதி, 30ந்தேதி ஆகிய தேதிகளிலும் அடுத்த மாதம் (மே)  5, 13, 20 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 6 போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஐசிசிஐ,  பி.சி.சி.ஐ. உயர்மட்ட குழு ஆலோசித்து வருகிறது.

சென்னையில் நடைபெற இருந்த மீதி ஆறு போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக, ஐசிசி தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

அதன்படி விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், புனே, ராஜ்காட், கொச்சி உள்பட பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்  சென்னையில் நடைபெறுவதாக இருந்த 6 போட்டிகளும் கொச்சியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிலப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.