தமிழகம் : வெப்பநிலை குறைவால் கொரோனா பரவுதல் அதிகரிக்குமா?

சென்னை

மிழகத்தில் வெப்ப நிலை குறைவதால் கொரோனா பரவுதல் அதிகரிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது.  ஆயினும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பரவுதல் குறைவாக உள்ளதாகவும் இதற்கு இந்தியாவில் நிலவும் சூடான வெப்பநிலை காரணம் எனவும் கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக வெப்பநிலை மாறுதல் மைய பேராசிரியர் ராமச்சந்திரன், “தமிழகத்தில் சராசரியாக 38.5 டிகிரி வரை வெய்யில் இருக்கும்.  தற்போது இந்த சராசரி 35 ஆகக் குறைந்துள்ளது.  இதற்கு முக்கிய காரணம் மாநிலத்தின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதாகும்.

மழைக்காலத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரிக்க மிகவும் வாய்ப்புண்டு  ஆனால் மக்கல் இதைக் கண்டு பயப்பட வேண்டாம்.   இந்த வைரஸ் தொற்று இந்த ஆண்டு இறுதி இருக்க வாய்ப்புண்டு.  இந்த வைரஸ் தொற்றை ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளில் எவ்வாறு குறைத்தனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அங்கு முழு ஊரடங்கு பிறப்பித்து அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அவரவர் வீட்டில் விநியோகம் செய்யபடது.   இது கொரோனாவை கட்டுப்படுத்த பெரிதும் உதவி உள்ளது.  இதையே தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம்.  இதற்காக அனைத்து விநியோகத்தையும் மையப்படுத்துவதைத் தொடங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.