நிலக்கரி இல்லாமல் மேட்டுர் அனல் மின் நிலைய உற்பத்தி பாதிப்பு

மேட்டூர்

நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டுர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

தற்போது அனைத்து அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது.   இதை தொடர்ந்து மத்திய அரசு அவ்வப்போது நிலக்கரியை அனுப்பி வருகிறது.   ஆயினும் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான அளவு நிலக்கரி வராததால் அந்த பற்றாக்குறை தொடர்கிற்து.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளது.   இதனால் இந்த அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் 4 ஆம் அலகில் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.   இந்த நிறுத்தத்தால் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.