முழு ஊரடங்கு : ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை

மிழகம் முழுவதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட உள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.   இதையொட்டி பல பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது.  தமிழகத்தில் பல  மாவட்டங்களில்  டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

எனவே டாஸ்மாக் கடைகள் அனைத்து ஞாயிற்றுக் கிழமையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது முழு ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆம் தேதிகள் செயல்படாது.

 

You may have missed