கொழும்பு

லங்கை கொழும்பு நகரில் இன்று காலை 8.45 மணி முதல் இதுவரை 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை 8 மணி முதல் தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து வருகிறது. முதலில் தெவாலயங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு அதன் பிறகு சொகுசு ஓட்டல்களிலும் தொடர்ந்துள்ளது. இதுவரை 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது கிடைத்த தகவலின்படி சுமார் 250 பேர் மரணம் அடைந்துள்ளனர். அத்துடன் சுமார் 500க்கும் படுகாயம் அடைந்து மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி கொழும்பு புறநகரில் உள்ள தமட்டகோடா என்னும் இடத்தில் இந்த எட்டாவது குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

நாடெங்கும் பதட்ட நிலை நிலவுவதால் இன்று மாலை ஆறு மணி முதல் நாளைக் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வர உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரவி மக்கள் பீதிக்குள்ளாவதால் வாட்ஸ்அப், முகநூல், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்களுக்கும் தற்காலிகமாக இலங்கையில் தடை விதிக்கபட்டுள்ளது.