தீபாவளி விடுமுறை : மக்கள் அலைமோதும் டாஸ்மாக் மதுக்கடைகள்

சென்னை

தீபாவளியை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 6 ஆயிரம் அரசு நடத்தும் மதுபானக் கடையான டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.60 கோடி அளவிலும் மாதம் தோறும் சுமார் 26 ஆயிரம் கோடி அளவிலும் அரசுக்கு வருமானம் வருகிறது. விடுமுறை நாட்களில் விற்பனை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும்.

இது போன்ற பண்டிகை தினங்களில் டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை இலக்கு நிர்ணயிப்பது உண்டும். இந்த தீபாவளிக்கு ரூ.350 கோடி விற்பனை இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ள்தாக கூறப்படுகிறது. அதனால் அனைத்து மது வகைகளும் கடைகளில் ஏராளமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வருடந்தோறும் வழக்கமாக தீபாவளி பண்டிகை அன்று மட்டும் ரூ.150 கோடி அளவுக்கு மது விற்பனை நடப்பது வழக்கம். இது போல நாளையும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதுவதை காண முடிகிறது.