தொடர் நீர் வரத்தால் பவானி சாகர் அணையில் இருந்து மேலும் நீர் வெளியேற்றம்

ரோடு

வானி சாகர் அணிக்கு தொடர்ந்து நீர் வரத்தால் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியதால் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு1300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தென் இந்தியாவின் மிகப் பெரிய மண் அணையான பவானி சாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் கன மழையால் வினாடிக்கு 11148 கன அடி நீர் வந்துக் கொண்டு இருக்கிறது.   தற்போதைய நீர் இருப்பு 28.8 டி எம் சி ஆக உள்ளது.  இந்த அணையின் முழுக் கொள்ளளவு 105 அடி ஆகும்    தற்போது இந்த அணையில் 100 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

நேற்று முன் தினம் அணையின் நீர் மட்டம் 96.63 அடியாக இருந்தது.  அத்துடன் வினாடிக்கு 5689 கன அடி நீர் வரத்து இருந்தது.   அதையொட்டி காளிங்கராயன் வாய்க்கால் மூலம் வினாடிக்கு 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.    நேற்றும் நீர்வரத்து மேலும் அதிகரித்து 6749 கன அடி நீர் வந்ததால் அணையின் நீர் மட்டம் 97.16 அடியை எட்டியது.

 

இன்று காலை மேலும் நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 11148 கன அடி நீர் வந்ததால் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது.   நேற்று கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது வினாடிக்கு 1800 கன அடி  நீர் திறந்து விடப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி