கொரோனா அச்சுறுத்தல் : மதுரை மத்திய சிறையில் 51 கைதிகள் விடுதலை

துரை

துரை மத்திய சிறையில் இருந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 51 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாக இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அனைத்துக்கும் பக்தர்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் உள்ள இடங்களில் சிறைச்சாலைகளும் ஒன்றாகும்.

கொரோனா பரவுவதை தடுக்க மதுரை மத்திய சிறையில் 51 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சிறு குற்றங்கள் காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 51 பேரும் சொந்த ஜாமீனில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.