க்னோ

யோத்தி நகரில் நடைபெற இருந்த ராம நவமி கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.  அதையொட்டி இந்தியாவில் திருப்பதி, சீரடி, காஞ்சிபுரம், பழனி உள்ளிட்ட பல திருத்தலங்களில் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமர் பிறந்த அயோத்தி நகரில் இந்த வருட ராம நவமி விழா வரும் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற இருந்தது.  தற்போது ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் வழக்கமாக வரும் கூட்டத்தை விடப் பன்மடங்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இங்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  இதைத் தடுக்க இந்த விழா ரத்து செய்யப்படுவதாக விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் மகந்த் கல்யாண் தாஸ் லக்னோவில் தெரிவித்துள்ளார்.