கொரோனா அச்சுறுத்தல் : ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து  கனடா விலகல்

டோக்கியோ

ப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து முதல் நாடாக கனடா விலகியது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற உளன. வரும் ஜூலை மாதம் நடைபெறும்  இந்த போட்டிகளில் அனைத்து உலக நாட்டு விளையாட்டு பிரபலங்களும் கலந்துக் கொள்கின்றனர்.   இந்தப் போட்டிகளைக் காண உலகெங்கும் இருந்து லட்சக் கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கோவிட்19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது.   அதையொட்டி ஒலிம்பிக் போட்டிகளை ஜுல்லை மாத்ம் நடத்த வேண்டாம் எனவும் ஒரு வருடம் ஒத்தி வைக்கலாம் எனவும் யோசனை தெரிவிக்கப்பட்டது.  ஜப்பான் பிரதமரும் இதை வரவேற்றுள்ளார்.  ஆயினும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அமைப்பு இது குறித்து முடிவு எடுக்காமல் உள்ளது.

இந்நிலையில் கடனா நாட்டின் ஓலிம்பிக் குழு மற்றும் மாற்றுத் திரனாளிகள் ஒலிம்பிக் குழு ஆகியவை நேற்று ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியது.  இந்த கூட்டத்தில் இந்த வருட ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து கனடா நாடு விலக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸ்  பரவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகும் முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கார்ட்டூன் கேலரி