‘’ ஐயோ அமெரிக்காவா, வேணாம்’’    அலறித்துடிக்கும் குடிமகன்..

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாடக பயிற்சி பேராசிரியராக இருப்பவர், டெர்ரி ஜான்.

கேரளாவின் நாடக கலை குறித்து ஆய்வு செய்யக் கடந்த செப்டம்பர் மாதம் கொச்சி வந்தார்.

மார்ச் மாதம் அவரது விசா முடிந்து விட்டது. முன்னதாக அவர் வாஷிங்டன் கிளம்ப ஆயத்தமானபோது, கொரோனா காரணமாக விமானங்கள் ரத்து, ஊரடங்கு என நிறையக் களேபரங்கள் அரங்கேறி இருந்தன.

தானாகவே ஜானின் விசா மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ‘ அமெரிக்கா இப்போது இருக்கும் நிலையில் என்னை வாஷிங்டன் அனுப்பாதீங்க’’ என்று கேரள உயர் நீதிமன்ற கதவுகளைத் தட்டி முறையிட்டுள்ளார், ஜான்.

’’அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அச்சமூட்டும் வகையில் உள்ளது. இப்போது அங்குச் செல்ல விரும்பவில்லை. கேரளாவில் இருப்பதே எனக்குப் பாதுகாப்பு. எனவே எனது விசாவை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும்’’ என்பது அவரது வாதம்.

இது தொடர்பாகச் சாந்தி என்ற வழக்கறிஞர் மூலம் ஜான், கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது, நீதிமன்றம்.

– ஏழுமலை வெங்கடேசன்