கொரோனா : மும்பையில் விநாயக சதுர்த்தி விழா ரத்து

மும்பை

மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் இந்த வருட விநாயக சதுர்த்தி  விழாவை ரத்து செய்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாகி வருகிறது. இதில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயக சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

மும்பை நகரில் லால்பாக்சா ராஜா கணேசோத்சவ் மண்டல் என்னும் அமைப்பு ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி விழாவைப் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது.  பல புதிய அமைப்புக்களுடன் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பூஜை நடைபெறும்.

இந்த அமைப்பு கொரோனா தாக்குதல் காரணமாக இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை ரத்து செய்துள்ளது அதற்குப் பதிலாக அதே இடத்தில் இரத்தம் மற்றும் பிளாஸ்மா தான முகாம் ஒன்றை நடத்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

கார்ட்டூன் கேலரி