கொரோனா : தனிமைப்படுத்தப்படும் கிருஷ்ணகிரி நகரம்

கிருஷ்ணகிரி

கொரோனா அச்சம் காரணமாகக் கிருஷ்ணகிரி நகரம் தனிமைப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

கிருஷ்ணகிரி நகரில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.

இதனால் கிருஷ்ணகிரி பச்சைப்பகுதியாக விளங்கி வந்தது.

விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி கிருஷ்ணகிரி நகரில் இன்று 11 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

மேலும் அந்த மருத்துவர் நகரின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததால் கிருஷ்ணகிரி நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி