கொரோனா அச்சத்தால் எடுக்க ஆளில்லாமல் கீழே கிடந்த ரூபாய் நோட்டுக்கள்

டில்லி

கொரோனா பயத்தால் டில்லி நகரில் கீழே விழுந்து கிடந்த மூன்று ரூ.500 நோட்டுக்களை எடுக்க யாரும் முன் வரவில்லை

மாதிரி புகைப்படம்

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

நாட்டு மக்களுக்கு அரசு பல எச்சரிக்கைகள் விடுத்துள்ளன.

அவற்றில் ஒன்று கீழே கிடக்கும் பொருட்களில் கொரோனா வைரஸ் இருக்கும் என்பதாகும்.

டில்லியில் கேசவ புரம் பகுதியில் நேற்று மதியம் மூன்று 500 ரூபாய் நோட்டுக்கள் கீழே விழுந்து கிடந்தன.

அந்த தெருவில் சிலர் நடமாடிய போதிலும் கொரோனா அச்சுறுத்தலால் யாரும் அதை எடுக்க முன் வரவில்லை.

ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த காவல்துறையினர் கையுறை அணிந்து அந்த நோட்டுக்களை கிருமி நாசினி தெளித்து எடுத்தனர்.

அந்த பணத்தைச் சொந்தம் கொண்டாட யாரும் வராததால் நோட்டுக்கள் கேச்வபுரம் காவல்நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

விவரம் அறிந்து அந்த பணத்தை தொலைத்த சரண்ஜித் கவுர என்னும் பெண் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.

தாம் கேசவபுரம் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்ததாகவும் அது வழியில் விழுந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சரண்ஜித் கவுர் அங்குள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார்.