கொரோனா : சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் வெளியூர் பயணம்

சென்னை

சென்னை நகரில் இருந்து இதுவரை அரசு பேருந்துகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை உலக அளவில் 3.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 16503 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இந்தியாவில் 476 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மக்கள் யாரும் ஒன்றாகக் கூடுவதால் கொரோனா பரவும் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   ஆயினும் மக்கள் அதைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றனர்.

பயணங்கள் இன்று மாலையுடன் தடை செய்யப்படும் என்பதால் சென்னையில் உள்ள அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.  இதுவரை சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் சுமார் 1855 பேருந்துகளில் சுமார் 1.48 லட்சம் பேர் வெளியூருக்குச் சென்றுள்ளனர்.