திருவனந்தபுரம்

விஷு பண்டிகைக்கு கேரளாவில் திரைப்படங்கள் வெளியாகவில்லை

கொரோனாவை முதலில் தருவித்த கொண்ட மாநிலம் கேரளா.

அந்த நோயின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

அதில் ஒன்று –திரையரங்குகள் அடைப்பு.

பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ‘அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற திரைப்படம் இந்த ,மாதம் 26 ஆம் தேதி வெளிவருவதாக இருந்தது.

மோகன்லால் நடிக்க பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த படம் –கொரோனாவால் ரிலீஸ் ஆகவில்லை.

மற்றொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டி நடித்த அரசியல் பேசும் ’’ஒன்’ என்ற சினிமா அடுத்த மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது.

அதுவும், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பகத்பாசில் நடித்த’மாலிக்’ , டோமினோ தாமஸ் நடித்த’ கிலோ மீட்டர்ஸ்.. கிலோ மீட்டர்ஸ்’’ ஆகிய படங்களும் ‘விஷு’ வை சிறப்பிக்க வெளிவருவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

அவையும் வெளியாகவில்லை.

கேரளாவின் உற்சாக பண்டியாக விஷுவுக்கு, கேரளாவில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருப்பது , இதுவே முதல் முறை.

– ஏழுமலை வெங்கடேசன்