ஸ்லாமாபாத்

கொரோனா தொற்று பாகிஸ்தானில் 5988 ஆகி உள்ளதால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளார்.

கொரோனா தொற்று உலகெங்கும் அதிகரித்து வருகிறது.  இதில் பாகிஸ்தானிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதைத் தடுக்க அந்நாடு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   பாகிஸ்தானில் இதுவரை 5988 பேர் பாதிப்பு அடைந்து 96 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இந்நாட்டில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மட்டும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.   கொரோனா பரவுதல் அதிகம் உள்ளதால் ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் எனப் பல தரப்பினரும் பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.  இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “மிகவும் கடினமான சூழலில் நாங்கள் ஊரடங்கை அறிவித்தோம்.   அதற்கு மக்கள் சிறப்பான ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.   கொரோனா பாதிப்பு குறையாததால் பாகிஸ்தானில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு இடுகிறேன்.

இந்த ஊரடங்கில் இருந்து ஏற்றுமதி துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம், மென்பொருள் மேம்பாடு,காகிதம், சிமெண்ட் மற்றும் உர ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.” எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.