கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : பள்ளிகள், சுற்றுலாத்தலங்கள் மூடல்

ட்டி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊட்டி மற்றும் ஆழியாறு அணைப்பூங்கா மற்றும் ஊட்டியில் உள்ள பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   குறிப்பாக ஒரே இடத்தில் பலர் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்னும் உலக சுகாதார மைய வழிகாட்டலுக்காகப் பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் ஊட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் ஆரம்பப் பள்ளிகள் மூடபட்டுள்ளன.   ஊட்டியில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.   இதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் வெறிச்சோடிப்போய் காணப்படுகிறது..

மற்றொரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஆழியாறு அணைப் பூங்கா இன்று முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அச்சுறுத்தல் திரைப்பட படப்பிடிப்பைய்ய்ம் விட்டு வைக்கவில்லை எனக் கூற வேண்டும்.   கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வலிமை மற்றும் மாநாடு ஆகிய  படங்களின் படப்பிடிப்புக்கள் இந்த மாத இறுதி அதாவது மார்ச் 31 வரை ஒத்தி வைக்கவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.