தெற்கு ரெயில்வே : 92 ரெயில்களின் நேரம் தற்காலிக மாற்றம்

சென்னை

ரெயில்வேயில் பணிகள் நடைபெறுவதால் தாமதத்தை தவிர்க்க 92 ரெயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேயின் பல பகுதிகளில் ரெயில் பாதுகாப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெறுகின்றன.   இதனால் தெற்கு ரெயில்வேயின் கிழுள்ள அனைத்து கோட்டங்களிலும் ரெயில்கள் தினந்தோறும் தாமதமாக செல்கின்றன.

ரெயில்கள் சரியான நேரத்துக்கு சென்றடையும் வகையில் தெற்கு ரெயில்வே ரெயில்களின் நேரத்தை மாற்றி அமைத்துள்ளது.    இதில் திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், சென்னை கோட்டங்களில் உள்ள 92 ரெயில்களின் நேரம் மாற்றப் பட்டுள்ளது.

இவைகளில் பெரும்பாலான ரெயில்கலின் நேரம் 30 நிமிடம் வரை மாற்றப்பட்டுள்ளது.   ஒரு சில ரெயில்களின் நேரம் 45 முதல் 60 நிமிடம் வரை மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் தற்காலிகமானது என தெற்கு ரெயில்வே தெரிவித்துளது/