டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வீட்டுப் பொருட்களின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரித்துள்ளது.

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.    இதன் மூலம் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.   பலர் தங்களிடம்  உள்ள செல்லாத நோட்டுக்களை மாற்ற கடுமையான சிரமத்துக்கு உள்ளாகினர்.   இவை எல்லாம் கண்ணுக்கு முன் நடந்த சம்பவங்கள் ஆகும்.   ஆனால் கண்ணுக்குத் தெரியாத பல பாதிப்புகளும் உண்டாகி உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

சமிபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வீட்டுப் பொருட்களின் காலாண்டு மதிப்பு என்னும் ஆரிக்கையை வெளியிட்டுள்ளது.    இந்த அறிக்கையின் படி வீட்டில் உள்ள பொருட்களின் மதிப்பு சிறிது சிறிதாக வீழ்ச்சி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.   இதன்படி வீட்டுப் பொருட்களின் மதிப்பு 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 95.2% ஆக இருந்துள்ளது.   அதே வருடம் டிசம்பர் இறுதியில் 89.2% ஆக குறைந்துள்ளது.

அதே   போல 2017ஆம் வருடம் மூன்றாம் காலாண்டில் வீட்டுப் பொருட்களின் மதிப்பு 90% ஆக குறைந்துள்ளது.   முந்தைய வ்ருடம் இதே கால கட்டத்தில் 95.2% ஆக இருந்தது குறிப்பிடத் தக்கது.   அதே போல 2016 டிசம்பர் 89.2% ஆக இருந்த வீட்டுப்பொருட்களின் மதிப்பு 86.4% ஆக குறைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் மக்களிடையே இந்த காலகட்டங்களில் பணப்புழக்கம் குறைந்ததே காரணம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி நாட்டு மக்களின் வீட்டுச் செலவு 10.9% இருந்து 11.7% ஆக அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளது.   இதே தகவலை மத்திய புள்ளி விவரத் துறையும் அளித்துள்ளது.   அந்த தகவலில் வீட்டு சேமிப்புத் தொகை  23.6% இருந்து 19.2% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.