தேர்தல் அச்சம் : கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகையில் பாதி அளிப்பு

மீரட்

மோடியின் பரப்புரை வாக்குறுதிக்கு பிறகு உத்திரப் பிரதேச அரசு கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையில் பாதியை அளிக்க உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அதிகம் கரும்பு பயிரிடபடுகிறது. நாட்டின் மொத்த கரும்பு உற்பத்தியில் 45% இங்கு பயிரிடப்படுகிறது. அதே நேரத்தில் சர்க்கரை உற்பத்தி அதிகமானதால் சர்க்கரை விலை மிகவும் குறைந்துள்ளது. அதனால் ஆலை உரிமையாளர்களால் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகையை தர முடியாத நிலை வந்துள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அதிகமாக இருந்த்தால் பாஜக அரசு தரவேண்டிய தொகையை கொள்முதல் செய்த 14 நாட்களுக்கு பெற்றுத் தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அதுபோல நடக்காததால் மிரட் பகுதியில் உள்ள விவசாயிகள் சங்கம் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது. அந்த அதிருப்தி தற்போதைய மக்களவை தேர்தலி நடைபெறும் என பாஜக அஞ்சியது.

இதனால் கரும்பு விவசாயிகளின் கோபத்துக்கு அஞ்சி பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையின் போது இந்த பகுதி மக்களுக்கு கரும்பு கொள்முதல் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார். அதை ஒட்டி உத்திரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு நிலுவைத் தொகையில் பாதியை வழங்க உள்ளது. .

இது குறித்து மாநில தலைமை செயலர் சஞ்சய் பூஸ்ரெட்டி “கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையில் பாதித் தொகை வரும் வாரத்துக்குள் வழங்கப்படும். மீதமுள்ள தொகை ஜுன் மாத இறுதிக்குள் அளிக்கப்படும். இது புதிய திட்டம் அல்ல என்பதால் இதற்கு தேர்தல் ஆணைய அனுமதியைக் கோர தேவை இல்லை” என அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.