குடும்பத்தைக் காப்பாற்றக் காவலாளி வேலை பார்க்கும் கவுன்சிலர்…

குடும்பத்தைக் காப்பாற்றக் காவலாளி வேலை பார்க்கும் கவுன்சிலர்…

கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்ற சில வாரங்களிலேயே கார் வங்கி, பங்களா கட்டி ’செட்டில்’’ ஆவது அரசியல் வாதிகளின் அழகு.

ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக குடும்பத்தைக் காப்பாற்றக் காவலாளி வேலை பார்க்கிறார், முன்னாள்  கவுன்சிலர் ஒருவர்.

அவர் பெயர் தியோரா திஜாரே.

நாக்பூர் மாநகராட்சி கவுன்சிலராக இரண்டு முறை பதவியில் இருந்துள்ளார். நிலைக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினரான திஜாரே, பிழைக்கத் தெரியாதவர் எனப் பெயர் எடுத்தவர்.

கொரோனா பரவலுக்கு முன்னர் , ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக பணியாற்றி வந்த அவருக்கு கமிஷன் கிடைத்தது. அதனை வைத்து குடும்பத்தை ஓட்டி வந்தார்.

கொரோனாவால் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கிப் போனதால், வருமானம் இல்லாமல் தவித்த திஜாரே அங்குள்ள ஒரு நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

மாத சம்பளம், 7 ஆயிரம் ரூபாய்.

இவருக்கு வயது என்ன தெரியுமா?

71.

ஈசிச்சேரில் படுத்துக்கொண்டு, ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் காக்கி சட்டை மாட்டிக்கொண்டு காவல் காக்கிறார்.

-பா.பாரதி

You may have missed