நிருபருடன் மோதல்: பிரஸ்மீட்டை பாதியில் முடித்த  ட்ரம்ப்..

நிருபருடன் மோதல்: பிரஸ்மீட்டை பாதியில் முடித்த  ட்ரம்ப்..

பொதுவாகவே சில குறிப்பிட்ட செய்தியாளர்களுக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் ஆகாது.

அண்மையில் டெல்லி வந்திருந்தபோது, ஒரு ஆங்கில நிருபருடன் ட்ரம்ப் சண்டை போட்டது, பிரசித்தம்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் ட்ரம்ப் எப்போதும் கொதி நிலையிலேயே உள்ளார்.

வாஷிங்டனில் நேற்று ட்ரம்ப் பேட்டி அளித்தார்.

அப்போது சி.பி.எஸ். நியூஸ் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங் என்பவர், கொரோனா குறித்து, ட்ரம்ப்பிடம் சில கேள்விகள் எழுப்பினார்.

(அந்த நிருபர் சீனாவைச் சேர்ந்தவர்.)

கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவும், சீனாவும் கீரியும், பாம்புமாகச் சீறிக்கொண்டிருப்பது ஊர் அறிந்த செய்தி.

இந்த நிலையில் அந்த சீன நிருபரின் கேள்வியால் எரிச்சல் அடைந்த ட்ரம்ப்’ இந்த கேள்வியை என்னிடம் கேட்க வேண்டாம். சீனாவிடம் கேளுங்கள்’ என்று ஆவேசமானார்.

அது மட்டுமல்ல.

பிரஸ்மீட்டை பாதியில் கேன்சல் செய்து விட்டு, கிளம்பி விட்டார், ட்ரம்ப்.

– ஏழுமலை வெங்கடேசன்