யமுனை நதியில் கடும் வெள்ளம் : ரெயில்கள் ரத்து

டில்லி

முனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.   டில்லிப் பகுதியில் யமுனை ஆற்றின் வெள்ளம் அளவுக்கு மீறி உள்ளதாக எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.    லோகா புல் ரெயில்வே பாலத்தின் மீது வெள்ளம் ஓடுகிறது.

அடை ஒட்டி அந்த லோகாபுல் பாலம் மூடப்பட்டுளது.   பாலம் மூடபட்டதை ஒட்டி அந்த பாலத்தின் வழியே செல்லும் 27 பயணிகள் ரெயில் முழுவதுமாக   ரத்து செய்யப்பட்டுள்ளது.   இது தவிர 7 ரெயில்கள் மாற்றுப் பாதையில் விடப்பட்டுள்ளன.

தற்போது யமுனையில் தண்ணீர் அளவு 205.53 புள்ளிகளாக உள்ளது.  இந்த அளவு நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

You may have missed