ஒகேனக்கல் : சுற்றுலாப் பயணிகளுக்கு விடுதியில் தங்க தடை

--

கேனக்கல்

கேனக்கல் வெள்ளம் காரணமாக விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்க  காவல்துறை தடை விதித்துள்ளது.

கேரள மாநில வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் கன மழை தொடர்கிறது.   இதனால் கபினி மற்றும் கே எஸ் ஆர் அணைகள் நிரம்பி உள்ளன.   ஆகையால் இங்கிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.    கடந்த ஞாயிறு மாலை 5 மணியில் இருந்து இந்த நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேருகிறது.

நேற்று காலை முதல் திறக்கப்பட்டுள்ள  முழு அளவான வினாடிக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கன அடி நீர் வந்துக் கொண்டுள்ளது.   இதனால் அருவியில் குளிக்க பொது மக்களுக்கு கடந்த 6 நாட்களாக தடை விதிக்கபட்டுள்ளது.    அருவிக்கு செல்லும் வழியிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டுள்ளது.

ஒரு சில சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி அருவிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.   இதை ஒட்டி இங்குள விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளை தங்க அனுமதிக்கக் கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளனர்,