பொதுத் தேர்தல் எதிரொலி : ஐ பி எல் 2019 அமீரகத்தில் நடைபெறலாம்

டில்லி

டுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைவதை ஒட்டி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.    இந்த தேர்தல் நடைபெறும் கால கட்டமும் ஐபிஎல் தொடரின் கால கட்டமும் அனேகமாக ஒன்றாக அமையும் என தெரிகிறது.  தேர்தல் நேரத்தில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் வேறு நாட்டில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இது குறிட்து ஐபிஎல் அணித் தலைவர் ராஜிவ் சுக்லா, “நாடாளுமன்ற தேர்தலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் அனேகமாக ஒரே காலகட்டத்தில் வரும் என நினைக்கிறேன்.  அதனால் வேறு நாட்டில் நடத்த ஆலோசனை நடத்தி வருகிறோம்.  அநேகமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த போட்டிகள் நடத்தலாம் என்னும் யோசனை உள்ளது.”  எனக் கூறி உள்ளார்.

மற்றொரு ஐபிஎல் அதிகாரி சில போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஒரு சில போட்டிகளை தென் ஆப்ரிக்காவிலும் நடத்த ஆலோசனை நடை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது குறிப்பிடத் தக்கது.