Random image

கடும் மழை : வால்பாறை, கூடலூர் பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை

கூடலூர்

ழை கடுமையாக பெய்து வருவதால் கூடலூர், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரண்டாம் நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.   நீலகிரி, கோவை மட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.

கன மழையின் காரணமாக வால்பாறை மற்றும் கூடலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுளது. இதைத் தவிர நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வட்டத்தில் அமைந்துள்ள சில பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.