சேலம்:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள தரைபாலம் மூழ்கியது.

தொடர் மற்றும் கனத்த மழை காரணமாக அங்குள்ள  திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராசிபுரம் அருகே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், 5 கிராமங்களுக்கு செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலத்தில் தண்ணீர் வேகமாக செல்வதால், அதைத்தாண்டிச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வாகனங்கள் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. சைக்கிள், இருச்சக்கர வாகனங்களை பலபேர் சேர்ந்து தூக்கிச்ச்சென்று பாலத்தை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுஉள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத அளவில் அரசு விரைவில் உயரமான பாலம் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.