கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை

தொடரும் கனமழையால் புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுள்ளது.

நேற்று முதல் தமிழகத்தில் இவ்வாண்டின் பருவமழை தொடங்கி உள்ளது. நேற்று முன் தினம் இலங்கையை ஒட்டிய கிழக்கு பதியில் நிலை ஒண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்துள்ளது. அது தென் மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதை ஒட்டி இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதை ஒட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராவ் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிராது. அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நாகை மாவட்டத்தில் பள்ளிக்ளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட அட்சியர் கனேஷ் அம்மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவு இட்டுள்ளார்.