கன மழை : தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை – இரு விமானம் ரத்து

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு இடி மின்னலுடன் கடுமையாக கனமழை பெய்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்தார். தொடர்ந்து வரும் மழையால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.