கனமழை : இன்று 5 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

--

சென்னை

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வடக்கு மாநிலங்களில் கன மழை பெய்து வருகின்றது. அந்த மழை இன்றும் தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதனால் 5 மாவட்டங்களில் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுளது.

இந்த தகவலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் சென்னை பல்கலைக்கழகம் இன்று நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.