எழும்பூர் வரும் ரெயில்கள் கனமழையால் 2 மணி நேரம் தாமதம்

--

சென்னை

னமழையால் சென்னை எழும்பூர் வரும் ரெயில்கள் இரண்டு மணி நேரம் வரை தாமகதமாக வந்துக் கொண்டு இருக்கின்றன.

வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் கன மழையால் 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் கன மழை தொடர்ந்து விடாமல் பெய்து வருகிறது. அதனால் சென்னை எழும்பூருக்கு வரும் தென் மாவட்ட ரெயில்கள் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்துக் கொண்டு இருக்கின்றன.

இதனால் பயணிகள் பெருமளவில் அவதி அடைந்துள்ளனர்.