டில்லி

மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்ச தனியார் மருத்துவமனைகளில் அளிப்பது புதிய காப்பிட்டு திட்டத்தால் நிறுத்தப் படும் என கூறப்படுகிறது.

பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட மருத்துவ திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டமாகும். இந்த திட்டத்தில் பிரபல தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் கீழ் வரும் மருத்துவ மனைகள் மொத்தமுள்ள சிகிச்சை இடங்களில் 10% இடங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் பல நோயாளிகள் பலனடைந்து வந்துள்ளனர்.

தற்போது ஆயுஷ்மான் பாரத் காப்பிட்டு திட்டத்தின் படி இந்த ஏழை நோயாளிகளுக்கான கட்டணம் காப்பிட்டு நிறுவனங்களால் வழங்கப்பட உள்ளது. ஆகவே பிரபல மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சை இடங்களும் நிரம்பும் நிலை ஏற்படும் எனவும் ஏழைகளுக்கான 10% சிகிச்சை வசதிகள் இதனால் ரத்து செய்யப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனித்தனி அளவு நிர்ணயம் செய்ய தேவை இல்லை என கூறி உள்ளது. தொழிலாளர்களுக்கு அளிக்கபடும் ஈ எஸ் ஐ திட்டத்தை பின்பற்றலாம் என யோசனை தெரிவித்துள்ளது. ஈ எஸ் ஐ சட்டப்படி ரூ21000 க்கு குறைவாக மாத ஊதியம் பெறுவோரிடமிருந்து 4.75% தொகையும், தொழில் அளிப்போரிடமிருந்து 1.75% தொகையும் பெறப்படுகிறது.