மக்கள் ஊரடங்கு : இன்று இஸ்லாமியர்கள் வீட்டுக்குள்ளேயே தொழுகை

சென்னை

க்கள் ஊரடங்கை முன்னிட்டு இஸ்லாமியர்கள் இன்று வீட்டுக்குள்ளேயே தொழுகை நடத்துமாறு ஜமாத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகத் திருப்பதி, பழனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன.

உலக அளவில் மெக்கா, வாடிகன் போன்ற நகரங்களுக்கும் பக்தர்கள் வர அனுமதி கிடையாது.

இன்று கொரோனா பரவுதலைத் தடுக்க மக்கள் ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி ஜமாத்துல் உலமா சபை இஸ்லாமியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மசூதிகள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் மட்டும் அங்கு பாங்கு சொல்லித் தொழுது கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மற்ற இஸ்லாமியர்களை இன்று வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.