சென்னை

ன்று சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவதையொட்டி போக்குவரத்து தட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இன்று மறைந்த சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள  முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க உள்ளார்.  இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வந்துள்ளனர்.

இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.   அந்த விவரங்கள் பின் வருமாறு :

சென்னைக்கு ஓ எம் ஆர், இ சி ஆர் சாலை வழியாக வரும் அதிமுக வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து வலது  பக்கம் திரும்பி சீனிவாசபுரம் கடற்கரை உட்புற சாலை மற்றும் மெரினா உட்புறச்சாலையில் நிறுத்தப்பட வேண்டும்.

வடக்கு மாவட்டங்களான திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நேப்பியர் பாலம் வந்து பிறகு தீவுத்திடலில் நிறுத்த வேண்டும்.  அதிகமாக வாகனங்கள் வந்தால் அவை அருகில் உள்ள கல்லூரி மைதானங்களில் நிறுத்தப்பட வேண்டும்.

காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.  சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் அடையாறு பாதையில் இருந்து பிராட்வே செல்லும் போது கிரீன்வேஸ் ச்நாலை சந்திப்பில் இருந்து ஆர் கே மடம் சாலை,. லஸ், ராயப்பேட்டை, அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்ல வேண்டும்.

மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் அடையாறில் இருந்து வந்து கச்சேரி சாலையில் திரும்பி லஸ், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, அண்ணாசாலை வழியாகச் செல்ல வேண்டும்.  இதைப் போல் பாரிமுனையில் இருந்து அடையாறு செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திரும்பி ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக அண்ணா சாலை, ராயப்பேட்டை, ஆர் கே மடம் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய பணிகள் மற்றும் அலுவலகம் செல்வோர் தங்களது பணி இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 1 மணி நேரம் முன்பே கிளம்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.