ஊரடங்கால் டாக்டர் பணிக்குத் திரும்பிய  சினிமா இயக்குநர்..

படித்த படிப்புக்கும், பார்க்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாத நபர்களில் ஒருவர், கமலேஸ்வர் முகர்ஜி.

மே.வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்.

கொஞ்ச காலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்துள்ளார்.

டாக்டருக்கு படித்தாலும் முகர்ஜியின் கனவு சினிமா இயக்குநராக வேண்டும் என்பதே.

நினைத்த மாதிரி சினிமா துறையில் கால் பதித்தார்.

‘சந்தர் பாகர்’’ ‘’மேகே தாகா தாரா’’ உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்துள்ளார்.

ஊரடங்கால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்காத நிலையில் அவர், மீண்டும் டாக்டர் தொழிலுக்கு திரும்பி விட்டார்.

தனது பழைய டாக்டர் நண்பர்களுடன் இணைந்து, கொரோனா தடுப்பு முகாம்களில் பங்கேற்று சிகிச்சை அளித்து வருகிறார், முகர்ஜி.

மீண்டும் ஷுட்டிங் ஆரம்பமானதும், ‘ஸ்டார்ட்’’ ‘’கட்’’ சொல்ல கிளம்பி விடுவார்.